பொறியியல் படிப்புக்கான “ஆன்லைன் கவுன்சலிங்” ஆலோசனை கருத்தரங்கம்

பொறியியல் படிப்புக்கான “ஆன்லைன் கவுன்சலிங்” ஆலோசனை கருத்தரங்கம்

”தி இந்து” தமிழ் நாளிதழ் நடத்திய பொறியியல் படிப்புக்கான “ஆன்லைன் கவுன்சலிங்” ஆலோசனை கருத்தரங்கம் கோவை ஆர் எஸ் புரம் அரசு கலையரங்கில் 24 ஜூன் 18 அன்று நடைபெற்றது.  நமது கல்லூரி  இந்த கருத்தரங்கில் மாவட்ட ஸ்பான்சராக  பங்கேற்றது. இந்த கருத்தரங்கில் நமது முதன்மை செயல் அலுவலர் முனைவர் அனுஷா அவர்கள் பொறியியல் மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் நமது வாழ்வையே மாற்றுகின்றன என்ற தலைப்பில் பேசினார். இதில் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் முனைவர் வி. ரைமன்ட் உத்திராஜ், பட்டிமன்ற பேச்சாளர் எஸ் ராஜா, ரூட்ஸ் குழும இயக்குனர் கவிஞர் காளிதாசன் மற்றும் பலர் பேசினார்கள்